நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! அறுவை சிகிச்சை... பதற வைத்த ட்விட்!

manimegalai a   | Asianet News
Published : Feb 28, 2021, 06:20 PM ISTUpdated : Feb 28, 2021, 06:21 PM IST
நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! அறுவை சிகிச்சை... பதற வைத்த ட்விட்!

சுருக்கம்

தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் Big B என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டு, குணமடைந்த நிலையில்.. தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் அவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

78 வயதாகும் நடிகர் அமிதாப்பச்சன், ஏற்கனவே 'கூலி' என்கிற பாலிவுட்  படத்தில் நடித்து கொண்டிருந்த போது காயம் ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை தொடர்ந்து மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இவரது மனைவி ஜெயா பச்சனை தவிர, மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா என அனைவருமே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதில் இருந்து மீண்டனர். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அறுவை சிகிச்சையும் நடைபெற உள்ளதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... ‘உடல்நிலை மோசம்...  அறுவை சிகிச்சை ... எதையும் எழுத முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இவரது ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன், உடல் நலம் தேறி... நல்ல படியாக வீடு திரும்ப வேண்டும் என, ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்