நடிகர் மோகன்லாலின் 'மரைக்கார்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Published : Feb 28, 2021, 04:59 PM IST
நடிகர் மோகன்லாலின் 'மரைக்கார்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

சுருக்கம்

தரமான படைப்புகளை இயக்கிவரும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 'மரைக்கார்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயர் என்பவர் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.  

தரமான படைப்புகளை இயக்கிவரும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 'மரைக்கார்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயர் என்பவர் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இதில் 'மரைக்காயர்' கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் இவருடன் சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது. ஏற்கனவே இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில். தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி 'மரக்காயர்' திரைப்படம் உலகம் முழுவதும், மே மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார். தற்போது மோகன்லால் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'த்ரிஷ்யம் 2 ' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சில பேச்சுவார்த்தைகள் அடிபட்டது. ஆனால் படக்குழுவினர் இந்த பிரமாண்ட படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!
சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?