ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ பட நாயகன் ரியோராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடித்த படத்தின் படிப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற, நடிகர் ரியோ ராஜ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோ', குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் ஒன்றிணைத்து ரொமான்ஸ் படத்தில் நடித்து வந்தனர்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் “பிளாக்ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் மூலம் திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக மிகவும் புதுமையாகவும் யதார்த்தமாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
இது தான் ரத்த பாசம்! விஜய்ஸ்ரீ ஹரி ஹீரோவானதற்கு... போட்டு போட்டு வாழ்த்து கூறிய வனிதாவின் சகோதரிகள்!
'ரொமான்ஸ்' சீரியஸான விஷயத்தை கூட, கொஞ்சம் காமெடி ஜானரில் பேசியுல்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் கதாநாயகன் - காதநாயகியாகி நடிக்க, முக்கிய வேடத்தில் பிளாக்ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் நடித்துள்ளனர்.
'ராயன்' படத்திற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற தனுஷ்! இத்தனை கோடியா?
இந்த படத்திற்க்கு மாதேஷ் மாணிக்கம் என்பவர் ஒளிப்பதிவு செய்ய , சித்துகுமார் இசையமைத்துள்ளார், வருண் கே.ஜி. இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 60 நாட்களுக்களில் இப்படத்தின் படப்பிடிப்பை இடைவிடாமல் எடுக்க படக்குழு திட்டமிட்ட நிலையில், அதனை கச்சிதமாக செய்து செய்துமுடித்துள்ளனர். படப்பிடிப்பை முடித்த கையேடு, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. கூடிய விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட படக்குழு தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.