- Home
- Gallery
- இது தான் ரத்த பாசம்! விஜய்ஸ்ரீ ஹரி ஹீரோவானதற்கு... போட்டு போட்டு வாழ்த்து கூறிய வனிதாவின் சகோதரிகள்!
இது தான் ரத்த பாசம்! விஜய்ஸ்ரீ ஹரி ஹீரோவானதற்கு... போட்டு போட்டு வாழ்த்து கூறிய வனிதாவின் சகோதரிகள்!
வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாக அறிமுகமாக உள்ள 'மாம்போ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், விஜய்ஸ்ரீ ஹரிக்கு அவரது பெரியம்மா, மற்றும் சித்திகள் போட்டி போட்டு கொண்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மற்றும் ஆகாஷின் மகன் விஜயஸ்ரீ ஹரி, தன்னுடைய சிறு வயதிலேயே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நிலையில், தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இயற்க்கை அழகை... வாழ்வியலோடு படம் பிடித்து காட்டும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மாம்போ' என்கிற படத்தில் தான் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய்ஸ்ரீ ஹரி சிங்கங்களுடன் பழகுவது குறித்து பிரத்தேயாக பயிற்சிகள் எடுத்து கொண்டார். காரணம், இப்படத்தில் ஒரு சிங்க குட்டியுடன் விஜய்ஸ்ரீ ஹரி பயணிப்பதும், அதனை காப்பாற்ற போராடுவதும் தான் இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபு சாலமனின் மகள் தான் ஹீரோயினாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
'ராயன்' படத்திற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற தனுஷ்! இத்தனை கோடியா?
இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் நிலையில்... இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சென்னையில் உள்ள பலாஸோ திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதில் விஜய்ஸ்ரீ ஹரியின் தந்தை ஆகாஷ், மற்றும் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் கலந்து கொண்டு விஜய்ஸ்ரீ ஹரியை வாழ்த்தினர். விஜய்ஸ்ரீ ஹரியும் செம்ம ஸ்டைலிஷாக ஹீரோ லுக்கில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
நேற்றைய தினமே, வனிதா.. தன்னுடைய மகனை நினைத்து பெருமை படுவதாக கூறி, சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் பதிவு ஒன்றை போட்டு வாழ்த்து கூறிய நிலையில், தற்போது விஜய்ஸ்ரீ ஹரி ஹீரோவாவதற்கு, பெரியம்மா அனிதா, மற்றும் இவரின் சித்திகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் தங்களின் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளனர்.
விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை ஹீரோ ஒருவர்... சினிமாவில் அறிமுகமாகும் நிலையில், இவர் அருண் விஜய்யை போல பல சவால்களை கடந்து சாதிப்பாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.