- Home
- Gallery
- 'ராயன்' படத்திற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற தனுஷ்! இத்தனை கோடியா?
'ராயன்' படத்திற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற தனுஷ்! இத்தனை கோடியா?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராயன்' திரைப்படத்தில் நடித்து - இயக்கியதற்கு இதுவரை வாங்கிடாத மிகப்பெரிய தொகையை, தனுஷ் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Dhanush 50th movie Raayan:
நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படமாக உருவாக்கி உள்ள 'ராயன்' இன்று உலகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர், டீஸர், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.
Dhanush movie Review:
ப்ரீ புக்கிங்கிலேயே கோடிகளில் கல்லா கட்டிய தனுஷின் 'ராயன்' திரைப்படம் இன்று வெளியாகி... தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பினர் இதனை லாஜிக்கே இல்லாத ஆக்ஷன் படம் என கூறினாலும், மற்றொரு தரப்பினர்...எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்கிற தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Raayan Cast:
தனுஷை தவிர, இப்படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, உள்ளிட்ட அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், திரைக்கதையில் உள்ள தடுமாற்றமே இப்படத்தின் பலவீனமாக அமைத்துள்ளது. பா.பாண்டி படத்தின் படத்திற்கு பின்னர் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார்.
Actor Dhanushs Raayan Music
அதே நேரம் ஏ ஆர் ரகுமான் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்களும் BGM ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் போன்ற பாடல்கள் வேற லெவல். கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' மிதமான வரவேற்பையே பெற்ற நிலையில், தனுஷின் 50-ஆவது படமும் சுமார் கேட்டகிரி படம் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Raayan movie Dhanush salary
இந்நிலையில் இப்படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'ராயன்' படத்தை இயக்கி - நடித்துள்ளதால், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் பெறாத மிகபெரிய தொகையை தனுஷ் சம்பளமாக பெற்றுள்ளாராம். அதாவது தான் நடிக்கும் படங்களுக்கு 20 முதல் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெரும் தனுஷ், இப்படத்திற்கு அப்படியே இரண்டு மடங்காக சுமார் 50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 'ராயன்' படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.