
பிரபல இயக்குனர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "ராயன்", இன்னும் சில மணி நேரங்களில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இப்போதிலிருந்தே படத்தை கொண்டாட துவங்கியுள்ளனர்.
பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தான் "ராயன்". தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் ப்ரீ ரிலீஸ் வசூல் செய்துள்ளது ராயன் என்பது குறிப்பிடத்தக்கது.
வரதட்சணைக்கு எதிராக மாயா.. ரகுராம் எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படம் இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக மாறியுள்ளது. குறிப்பாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது மிகப்பெரிய பலமாகவும் கருதப்படுகிறது. நடிகை துஷாரா, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோரின் அண்ணனாக நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே. சூர்யா, வரலட்சுமி சரத்குமார் மூத்த தமிழ் திரை உலக நடிகர் சரவணன் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். நாளை காலை இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது, இப்பொழுது அது பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
இது என்னடா சிங்கபெண்ணுக்கு வந்த சோதனை? தடாலடியாக அடுத்தடுத்து டாப்புக்கு வந்த 2 விஜய் டிவி தொடர்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.