- Home
- Gallery
- வரதட்சணைக்கு எதிராக மாயா.. ரகுராம் எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!
வரதட்சணைக்கு எதிராக மாயா.. ரகுராம் எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கம் மற்றும் புவனேஸ்வரி குடும்பத்தினர் கை நனைக்க வருவதாக தகவல் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரகுராம் மாயாவிடம் எல்லா ஏற்பாடுகளையும் நீ தான் செய்ய வேண்டும் என்று சொல்ல மணிவண்ணன் மாயாவிடம் வைத்து நீயும் சீனுவும் காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கலாம் என்று சொல்ல மாயா ஷாக்காகிறாள். மாயா எதுவும் பண்ணிடாதீங்க என்று சொல்கிறாள்.
அடுத்த நாள் காலையில் லிங்கம் மற்றும் புவனேஸ்வரி குடும்பத்தினர் வீட்டிற்கு வருகின்றனர், வரதட்சிணை பற்றிய பேச்சு வர லிங்கம் நான் என்னுடைய பொண்ணுக்கு 100 சவரன் நகையை போட போவதாக சொல்ல புவனேஸ்வரி லிங்கமே அவ்வளவு செய்யும் போது ரகுராம் அதை விட இரண்டு மடங்காக தான் செய்வார் என்று பேசுகிறாள்.
ரகுராம் தனது மகளுக்கு செய்ய போகும் சீர் குறித்து பேச வர மாயா வரதட்சிணை வாங்குவது தப்பு இல்லையா என்று கேள்வி கேட்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ என்ன வக்கீலா என்று கோபப்பட ரகுராம் ஒரு நிமிஷம் என்று வெளியே வருகிறார்.
மாயா அவரிடம் பொண்ணுக்கு சீர் என்பது அவளுடைய சுயமரியாதை தான் என்று சொல்லி பாடம் எடுக்கிறாள். இறுதியாக ரகுராம் போர்வை போட்டு மூடப்பட்ட ஒரு தட்டுடன் வெளியே வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.