ஜாபர் சாதிக் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பரிவர்த்தனை? இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டு ஆதங்கம்!

Published : Jul 25, 2024, 04:46 PM IST
ஜாபர் சாதிக் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பரிவர்த்தனை? இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டு ஆதங்கம்!

சுருக்கம்

போதைப் பொருள் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் இருந்து, இயக்குனர் அமீர் வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி பண பரிவர்த்தனை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து ஆதங்கத்தோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தமிழில், மௌனம் பேசியதே, பருத்தி வீரன் போன்ற சிறப்பான படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குடன், அமீருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், இயக்குனர் அமீரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். 

இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக, அமீர் பற்றிய மற்றொரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவிய நிலையில், இதுகுறித்து அமீர் தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். இதுகுறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள, வலையொலி, உள்ளிட்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

குட்டி தேவதை கிளின் காராவுடன்... லண்டனில் உள்ள ஹைட் பார்கில் சிரஞ்சீவி குடும்பம்! வைரலாகும் புகைப்படம்!

போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கி கணக்கைக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாக கூறி, நேற்றைய முன்தினம் 23.7. 2024 அன்று, தினத்தந்தி, தினமலர், நியூஸ் 7, உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்த செய்திகளில் துளியும் உண்மையில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்புக்காக என்னை போன்றவர்களை பற்றிய தவறான தகவல்களை, தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன்மதிப்பையும், நம்பகத் தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர வேறொன்று கிடைக்கப் போவதில்லை.

இந்த வழக்கின் துவக்கத்திலிருந்து நான் CBI மற்றும் அமலாக துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னை பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும், தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு youtuber தனது சேனலில் என்னைப்பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினம் தந்திருக்கிறார். சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை கொண்ட இது போன்ற நபர்கள் இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து... எப்படியாவது இந்த வழக்கில் என்னை சேர்த்து கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்?.

Jyothika Childhood Photos: 5 வயதில் கூட ஜோதிகா அம்புட்டு அழகு! பலரும் பார்த்திடாத அன்சீன் புகைப்படங்கள்.!

மத்திய மாநில அரசுகளோ... தனிநபரோ... மானிடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம் ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துக்களையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்வைத்து வந்துள்ளேன், என்பதை தவிர என்னிடம் வேறு குறைகள் எதுவும் இல்லை.

இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா? 'அந்தகன்' படத்தில் நடிக்க கொடுத்த சம்பளத்தை திரும்பி கொடுத்த ஊர்வசி!

என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு. அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல என்பதையும்... எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலோ சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து, நேர்மைக்கு மாறாக இது போன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என இயக்குனர் அமீர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?