நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. அவருக்கு இணையவாசிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சத்துக்கு உள்ளாகி வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் 25 வயதான நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியில் உள்ள அவரது வருங்கால மனைவி அக்ஷயாவுக்கும் அண்மையில் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது. தனுஷின் உடல்நிலை காரணமாக, அவர் விமானத்தில் பயணம் செய்வது கடினமாக இருப்பதால், வீடியோ கால் மூலமே நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.
தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். மணமகள் அக்ஷயா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அவர் சொந்த ஊரில் இருந்தே நிச்சயதார்த்தத்தில் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அக்ஷயா - தனுஷ் திருமணம் இன்னும் சில மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளது. இணையவாசிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தனுஷ் - அக்ஷயா ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது போட்டோ எடுத்த நிறுவனம் நெப்போலியன் குடும்பத்தை நேரில் சந்தித்து போட்டோ ஆல்பத்தை வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் சீனிவாசன் நெப்போலியன் ஆல்பத்தை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள் பலர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பது பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள். "வாழ்த்துகள் பணம் always ultimate" என்று விமர்சனம் செய்துள்ளனர்.