
Revathi Knows All The Truths About Karthik Raj Karthigai Deepam 2 : ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் கும்பாபிஷேக எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் ஒரு நிகழ்ச்சியாக அன்னதானம் செய்யப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலை பூஜை நடைபெற இருந்த நிலையில் தான் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் கார்த்திக்கின் அம்மா அபிராமி. கார்த்திக் தனது அம்மாவிற்கு கடைசி காரியங்கள் செய்வதை ரேவதி பார்த்துவிட்டார். இதையடுத்து தனது பாட்டியிடம் கார்த்திக் பற்றியும் அவரது அம்மா பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.
கார்த்திக்கின் பாட்டியும் அபிராமி மற்றும் கார்த்திக் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார். ஆனால், கார்த்திக்கிற்கு திருமணம் நடந்தது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்கான நேரமும், சந்தர்ப்பமும் வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் அதை பற்றி கார்த்திக் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டி சொல்வதையெல்லாம் கேட்ட ரேவதி இனிமேல் அவரது அம்மா இறந்த துக்கம் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரேவதி கூறுகிறார். மேலும், தனக்கு எல்லா உண்மைகளும் தெரிந்துவிட்டது பற்றி கார்த்திக்கிற்கு தெரியவேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதற்கிடையில் அபிராமி இறப்பதற்கு முன் கார்த்திக்கும், ரேவதியும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும், தான் எங்கேயும் போக மாட்டேன் உன்னுடன் தான் இருப்பேன் என்றும் அபிராமி கூறினார்.
இதுவும், கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ரேவதிக்கு குறி சொன்ன அந்த ஜோதிடரும் அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று இரட்டை குழந்தை பிறக்கும் என்று குறி சொன்னார். இப்போது கார்த்திக்கின் அம்மா வேறு இறந்துவிட்டார். இதை வைத்து பார்க்கும் போது கார்த்திக்கின் அம்மா அவருக்கு மகளாக பிறக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
ஆனால், வாரத்தில் ஒரு சில எபிசோடுகள் மட்டுமே வரும் அபிராமியின் கேரக்டரை ஏன் அதற்குள்ளாக முடித்து வைத்தார்கள் என்ற கேள்வியும், குழப்பம் தான் சீரியல் பார்க்கும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒரு புறம் ரேவதிக்கு எல்லா உண்மையும் தெரிந்தது நல்ல விஷயமாக இருந்தாலும் மறுபுறம் கார்த்திக்கிற்கு எல்லா வகையிலும் ஆறுதலாக இருந்தவர் தான் அவரது அம்மா. இனிமேல் கார்த்திக்கிற்கு அவரது அம்மாவிற்கு பதிலாக ரேவதிதான் பக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.