கவுண்டமணி பற்றி யாரும் அறிந்திராத உண்மை என்ன தெரியுமா?

Published : Jul 02, 2025, 08:08 PM IST
Goundamani

சுருக்கம்

Unknown Truth About Goundamani : காமெடி ஜாம்பவான் கவுண்டமனி பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Unknown Truth About Goundamani : தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவராக இடம் பெற்றிருந்தவர் தான் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி. நாகேஷ், மனோரமா ஆகியோருக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் தான் கவுண்டமணி. எத்தனையோ படங்களில் காமெடியனாகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் பிறந்தவர் தான் கவுண்டமணி. இவரது நிஜ பெயர் சுப்பிரமணி. ஒரு சில படங்களில் சுப்பிரமணியாக நடித்தார். சினிமாவில் அவருடைய நடிப்பை கண்டு வியந்த பாக்யராஜ் அவரது பெயரை கவுண்டமணி என்று மாற்றினார். சினிமாவில் அறிமுகமான போது ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த கவுண்டமணி தனது நடிப்புத் திறமை நகைச்சுவை உணர்வு என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்தவே, சினிமாவில் அடுத்தடுதது வாய்ப்புகள் குவிந்து சினிமாவின் உச்சத்திற்கு செல்லும் நடிகராக மாறினார்.

கவுண்டமணியின் நகைச்சுவையை மட்டுமே நம்பி பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்தனர். கவுண்டமணி படத்தில் இருந்தால் அந்த படம் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவரை நம்பியே ஏராளமான படங்கள் ஓடியிருக்கின்றன. ஆரம்பத்தில் தனியாக நகைச்சுவை ரோல்களில் நடித்து வந்த கவுண்டமணி பின்னர் செந்தில் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து வந்தனர். இவர்கள் இல்லாத படங்கள் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு எல்லா படங்களிலும் இந்த இரட்டை காமெடியர்கள் இடம் பிடித்தனர்.

கவுண்டமணி பேசும் விதமும், அவரது உடையாடலும் ரசிகர்களை வியக்க வைத்தது. கவுண்டமணி கிட்டத்தட்ட 450க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் 10 க்கும் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் வில்லன் ரோல்களிலும் நடித்திருக்கிறார். கவுண்டமணி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளைத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, இந்தியன், நாட்டாமை, முறைமாமன், சூரியன், உனக்காக எல்லாம் உனக்காக என்று பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் என்றுமே ரசிகர்கள் மனதில்இருந்து நீங்கா இடம் பெற்ற படங்கள்.

கவுண்டமணியின் டயலாக்கை தான் இன்றும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பிடத்தக்க டயலாக் என்றால் அது பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா, இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, இங்க நான் ஒரே பிஸி, டேய் தகப்பா என்று ஏராளமான டயலாக்குகளை இன்றும் ரசிகர்கள் யூஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கிறார்கள்.

கவுண்டமணியுடன் இணைந்து நடிக்காத முன்னணி ஹீரோக்களை கிடையாது. அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என்று கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அதிலேயும் சத்யராஜ் கவுண்டமணி காம்பினேஷன் என்றால் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு ஹியூமர் அள்ளும். இதைப் பற்றி சத்யராஜே மேடையில் சொல்லிருக்கிறார். பிஸியான நடிகராக வலம் வந்த கவுண்மணி பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை இயக்குநர் பி வாசு பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கவுண்மணி எப்போதுமே தனியாக தான் இருப்பாராம். அவருக்கு என டிரைவரும் வைத்து கொள்ள மாட்டாராம். மேனேஜரும் வைத்து கொள்ள மாட்டாராம். இவ்வளவு ஏன் அவரிடம் கால்ஷீட் தேதிகளை குறித்து வைத்துக் கொள்ள ஒரு டைரி கூட கிடையாது. கால்ஷீட் தேதி மட்டும் சொல்லிவிட்டால் போதும் மனதில் வைத்துக் கொண்டு சொன்ன தேதிக்கு கரெக்டா டைமுக்கு வந்துவிடுவார்.

அவருடைய காரை அவரே டிரைவ் பண்ணிக்கிட்டு தான் வருவார். ஷூட்டிங்க்கிற்கு டைமுக்கு வரக் கூடிய நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். கவுண்டமணியைப் போன்று ரொம்பவே எளிமையான அருமையான நல்ல மனிதரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. அவரைப் போன்று இன்னொருவர் இருப்பாரா என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இயக்குநர் பி வாசு ஆரம்பத்தில் இயக்குநர் சந்தான பாரதியுடன் இணைந்து பணியாற்றி வந்தார். சந்திரமுகி, வண்ண தமிழ் பாட்டு, என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, நடிகன், சின்ன தம்பி, அதிகாரி என்று ஏராளமான படங்களை ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?