வெள்ளித்திரையை வீட்டு விட்டு சின்னத்திரைக்கு சென்ற டாப் 10 நடிகைகள் யார் யார் தெரியுமா?

Published : Jul 01, 2025, 08:50 PM IST
tamil actress

சுருக்கம்

Top 10 Actresses Who Moved From Cinema to Television : சினிமாவில் நடிகைகளுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு குறைகிறதோ அப்போது அவர்களது கவனம் சின்னத்திரை பக்கம் சென்றுவிடுகிறது. அப்படி சின்னத்திரைக்கு சென்ற டாப் 10 ஹீரோயின்கள் யார் என்று பார்க்கலாம்.

Top 10 Actresses Who Moved From Cinema to Television : திரைப்படங்களில் 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக நடித்த சில நடிகைகள், திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போக, சீரியல் நடிகைகளாக மாறியுள்ளனர் அப்படி மாறிய 10 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகைகளுக்கு அழகும், வாய்ப்பும் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும். இதுவே நடிகைகள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி, குறைந்தாலோ அவர்களுக்கான வாய்ப்பு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சினிமாவில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க, பெரும்பாலான நடிகைகள் உடலை கட்டுக்கோப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் வெள்ளித்திரையை விட்டுவிட்டு சின்னத்திரைக்கு சென்ற டாப் 4 நடிகைகள் பற்றி பார்க்கலாம். விஜயகாந்த், ரஜினிக்கு எல்லாம் ஜோடியாக நடித்த நடிகை ராதிகா இப்போது சின்னத்திரையில் அண்ணாமலை, சித்தி, வாணி ராணி, அரசி, சந்திரகுமாரி போன்ற சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் ஹீரோயினாக மாறியவர் ரம்யா கிருஷ்ணா. திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னர், இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள் கூட எதுவும் வெள்ளித்திரையில் கிடைக்காத நிலையில், சீரியல் நாயகியாக மாறி சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இவர் ஹீரோயினாக நடித்த, தங்கம், வம்சம், கலசம், ராஜகுமாரி போன்ற சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது சில சீரியல்களில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீனா 30 வயதை கடந்த பின்னர், தமிழ் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போக... வேறு வழி இல்லாமல் சன் டிவி சீரியல் பக்கம் சாய்ந்தார். அந்த வகையில் இவர் 'லட்சுமி' என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதை தொடர்ந்து, திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கிய நிலையில், சில வருடங்களுக்கு பின்னரே முக்கியத்துவம் கொண்ட குணச்சித்திர வேடங்களை சினிமாவில் தேர்வு செய்து நடிக்க துவங்கினார்

திருமணம் ஆன பின்னர் பட வாய்ப்பை இழந்த நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி. இவர் சன் டிவியில் ஹீரோயினாக நடித்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடியது. தற்போது வரை இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இதை தொடர்ந்து முத்தாரம், ராசாத்தி, போன்ற தொடர்களில் நடித்தார். ஜீ தமிழில் கடந்த ஓரிரு வருடத்திற்கு முன், புதுப்புது அர்த்தங்கள் என்கிற தொடரிலும் நடித்தார். அதே போல் மாரி சீரியலிலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

காதல் கொண்டேன், கோவில், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து 90-ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்த சோனியா அகர்வால், திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்னர், சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாணல்' என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் இந்த தொடரில் இருந்தும் பாதிலேயே விலகினார்.

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் பானுப்ரியா. இவரின் கண்களை ரசிப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவர், திருமணம் ஆகி, கணவரை பிரிந்து... இந்தியா வந்த பின்னர், தன்னுடைய மகளை வளர்ப்பதற்காக சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், இவர் நடித்த பெண், சக்தி, மனசே மந்திரம், தெய்வம், பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

பானுப்ரியாவை போல, நடிகை சீதாவும் பார்த்திபனை விவாகரத்து செய்த பின்னர் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காமல் போனதும், சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், இவர் நடித்த வேலன், சமரசம், பெண், இதயம் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை சுவலட்சுமி, வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்த பின்னர்... ஆன்மீக தொடராக எடுக்கப்பட்ட 'சூலம்' சீரியலில் நடித்தார். இந்த தொடர் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. இந்த தொடர் முடிவடைந்த கையேடு, வீட்டில் பார்த்த டாக்டர் மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

நடிகை அம்பிகாவும், திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின்னர், வெள்ளித்திரைப் வாய்ப்பு கிடைக்காமல் போக இப்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் நடித்த நாயகி, அருவி தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, மல்லி தொடரில் ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்ட நடிகை என்கிற பெருமைக்கு உரியவர் தான் குஷ்பு. வெள்ளித்திரையில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காத போது, சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக மாறினார். அப்படி அவர் நடித்த கல்கி, பார்த்த நியாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?