ஏன் அந்த படத்தில் நடித்தோம் என்று ஃபீல் பண்ணிய நடிகையை பற்றி தெரியுமா?

Published : Jul 01, 2025, 05:06 PM IST
bhanupriya

சுருக்கம்

Bhanupriya Regretted Acting in This film : பிரபலமான நடிகை ஒருவர் தான் அந்த படத்தில் நடித்தது தவறு என்று உணரச் செய்த படம் எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bhanupriya Regretted Acting in This film : ஒருகாலத்தில் உச்சநட்சத்திரமாக இருந்தவர். விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், ஜெயராம் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.`ஆராரோ ஆரிரரோ` படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளான படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாகவும், பாரம்பரியமாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து சினிமாவின் உச்சத்தில் இருந்தார்.

நடிப்புக்கு முழுக்கு போட்ட பானுப்பிரியா

பானுப்பிரியா தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்கள், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் செய்கிறார். அதுவும் எப்போதாவது. ஆனால் சில திரைப்படங்களை செய்து தவறு செய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் பானுப்பிரியா. அந்த திரைப்படங்களில் தனக்கு சொன்னது ஒன்று, ஆனால் செய்தது ஒன்று என்றும், அதில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனவும் சொல்லியிருக்கிறார். அவற்றை விருப்பம் இல்லாமல் செய்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பானுப்பிரியா சொன்ன படம் எது தெரியுமா?

பானுப்பிரியா ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய படம், சமீபத்தில் வந்த `நாட்டியம்` (2021) என்கிற தெலுங்கு படம் தான். ரேவந்த் கோருக்கொண்டா இயக்கிய இந்த படத்தில் கிளாசிக்கல் டான்சர் சந்தியா ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சந்தியாராஜு அம்மா கதாபாத்திரத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரியதாக முக்கியத்துவம் இல்லை என்றும், கதை சொல்லும்போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும், இப்படி அப்படி என்று நிறைய பில்டப் விட்டார்கள் என்றும் கடைசியில் செட்டுக்கு போனால் தன்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து ஷாக் ஆனதாக தெரிவித்திருந்தார்.

ஏமாற்றப்பட்ட பானுப்பிரியா

ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்றும், மகளை உத்வேகம் செய்யும் கதாபாத்திரம் என்றும் சொன்னார்களாம். ஆனால் கடைசியில் பார்த்தால் அப்படி இருக்கவில்லை, நடுவில் நிறுத்த முடியாது அல்லவா, சண்டை வரும். ஏன் என்று சொல்லி செய்தேன், ஆனால் செய்த பிறகு தவறு செய்த ஃபீலிங் வந்தது என்று சொல்லியிருக்கிறார் பானுப்பிரியா. இன்னொரு சினிமா விஷயத்தில் கூட இதேபோல் ஆகிவிட்டது என்று அவர் சொல்லியிருக்கிறார். தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த இன்டர்வியூவில் இந்த விஷயத்தை அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய கமெண்ட்ஸ் வைரல் ஆகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?