
குணச்சித்திர நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ரேஷ்மா. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.
அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, படவேட்டை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு தகவல், வைரலாக பரவி வருகிறது.
இவருக்கு பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் கணவரை விட்டு பிரிந்தார். பின் அமெரிக்கா சென்ற இவர், அவ்வபோது திரைப்படங்கள் நடிப்பதற்காக மட்டுமே இந்தியா வந்து சென்றார்.
மேலும் அமெரிக்காவில் ரேஷ்மாவிற்கு, ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். இருவருக்கும் அழகிய ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீரோடு அவர் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
இதை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவருடன் சேர்ந்து வாழாமல் இருக்கும் ரேஷ்மா, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் ரேஷ்மா நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், ஒரு சில தகவல்கள் உலா வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிஷாந்துடன், ரேஷ்மா நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரேஷ்மா தற்போது வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால் நமக்கு பிடித்தவர்களுடன் வாழுங்கள் என கூறியுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் இவர்தான் உங்களுடைய காதலரான என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரேஷ்மாவின் மூன்றாவது திருமணம் குறித்து பல தகவல்கள் உலா வந்தாலும் எது உண்மை என்பதை அவர் தான் கூற வேண்டும். அது வரை காத்திருப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.