மலையாளத்தில் ஒரு சிம்பு... இளம் ஷிரோவுக்கு 7 கோடி அபராதம், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி..!!

Published : Nov 30, 2019, 02:12 PM IST
மலையாளத்தில் ஒரு சிம்பு... இளம் ஷிரோவுக்கு 7 கோடி அபராதம்,  தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி..!!

சுருக்கம்

 வெயில் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் ஷேன் நிகம் குருபானி படத்துக்காக தலைமுடியை  வெட்டி விட்டார். 

சினிமாவில்  கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நடிகர்கள் தோற்றத்தை மாற்றுவது வழக்கம், அந்த வகையில்  இஷக் , கும்பலங்கி ,  நைட்ஸ் ,  போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்  மலையாள இளம் கதாநாயகன்  ஷேன் நிக்கம். இவரை வெயில் என்ற திரைப்படத்தில் நடிக்க அப்படத்தின் இயக்குனர் ஒப்பந்தம் செய்ததுடன் அவரது   தலைமுடியைநீளமாக வளர்க்கவும்  அறிவுறுத்தி இருந்தார் .  அதே நேரத்தில் நிகமுக்கு  பலவிதமான கட்டுப்பாடுகள் போடப்பட்டது அதில்  குறிப்பாக படப்பிடிப்பு முடியும் வரை தலைமுடியை வெட்டக்கூடாது என்று இயக்குனர் கூறியிருந்தது தான் அது. 

 

அதே போல் தலை முடி நீளமாக வளர்ந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது .  இடையில் குருபானி என்ற படத்தில் நடிக்கவும்  ஒப்பந்தம் செய்தனர் இந்நிலையில் வெயில் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் ஷேன் நிகம் குருபானி படத்துக்காக தலைமுடியை  வெட்டி விட்டார். இந்நிலையில் தான் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நிகம் வெளியிட்டார்,  அதைக்கண்ட வெயில் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்தனர் . ஒப்பந்தத்தை மீறி  படப்பிடிப்பு முடிவதற்குள்  தலைமுடியை  வெட்டியது குறித்து ஷேனிடம் இயக்குனர் தயாரிப்பாளர் கேட்டதற்கு சரியான பதில் இல்லை , இதனால் கோபமடைந்த  தயாரிப்பாளர்   ஜோபி ஜார்ஜ்,  மற்றும் இயகுனர் சரத் இணைந்து ,  மலையாள நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில்புகார்அளித்தனர்.

  

இது குறித்து விவாதிப்பதற்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்வாகிகள் இனிமேல்  ஷேன் நிகம்  திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் .  அவர் நடித்து வரும் வெயில் ,  குருபானி ,திரைப்படங்கள் கைவிடப்படுகின்றன.  அந்த படங்களுக்கு செலவழிக்கப்பட்ட ரூபாய் 7 கோடியை ஷேன்  திருப்பி தரவேண்டுமென அதிரடியாக தெரிவித்துள்ளனர்.  இது மலையாளத் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?