கூட்டு பாலியல் வன்புணர்வு... கொடூரமாக எரித்துக் கொலை... மருத்துவர் பிரியங்காவிற்காக களம் இறங்கிய தளபதி ஃபேன்ஸ்... விஜய் சொன்ன வார்த்தையை காத்த ரசிகர்கள்..!

Published : Nov 30, 2019, 02:41 PM ISTUpdated : Nov 30, 2019, 03:27 PM IST
கூட்டு பாலியல் வன்புணர்வு... கொடூரமாக எரித்துக் கொலை... மருத்துவர் பிரியங்காவிற்காக களம் இறங்கிய தளபதி ஃபேன்ஸ்... விஜய் சொன்ன வார்த்தையை காத்த ரசிகர்கள்..!

சுருக்கம்

 இந்நிலையில் பிரியங்காவின் கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு, விஜய் ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர். அதற்காக தனி ஹேஸ்டேக்கை ஒன்றை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டு செய்து வருகின்றனர். 

தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே உள்ள பாலத்திற்கு கீழ் பெண் ஒருவர் எரிந்த நிலையிலான சடலமாக மீட்கப்பட்டார்.  அதில் கொல்லப்பட்டவர்  27 வயதான பிரியங்கா என்பதும் அவர் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது. 

தனது இருசக்கர வாகனம் பழுதானதால் சுங்கச்சாவடி அருகே தனியாக நின்றிருந்த  அவரை அங்கிருந்த லாரி ஒட்டுனர்கள் புதருக்குள் இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரை கொலை செய்து எரித்துள்ளதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .  


மேலும் திட்டமிட்டு பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த 4 லாரி ஓட்டுநர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.  பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து மருத்துவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.  இதையடுத்து சோசியல் மீடியாவில் #RIPPriyankaReddy,#HangTheRapist #JusticeForPriyankaReddy போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. 

 

 இந்நிலையில் பிரியங்கா மற்றும் ரோஜாவின் கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு, விஜய் ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர். அதற்காக தனி ஹேஸ்டேக்கை ஒன்றை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டு செய்து வருகின்றனர். #PunishRapistsInPublic என்ற அந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், அதனை உலக அளவில் ட்ரெண்ட் செய்யும் முயற்சியில் விஜய் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். 

 

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசிய தளபதி விஜய், சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுங்கள், அதற்காக சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் பண்ணுங்க என கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தக்க சமயம் பார்த்து விஜய் ரசிகர்கள் செயலாக்கியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?