’ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ரிலீஸ் குறித்து படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Published : Jun 09, 2023, 06:30 PM IST
’ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ரிலீஸ் குறித்து படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

சுருக்கம்

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ரேவ் பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு மூடுவடைந்து விட்டதாக  படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக ரிலீஸ் குறித்த ஆப்டேட் ஒன்றையும் கூறியுள்ளது.

விக்கி - நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா? திருமண நாளில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

ஐஸ்வர்யா கவுடா கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ் சித்திபாலி, ரித்திகா சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா கவுடா, சுச்சந்திர பிரசாத், தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைசூர், உடுப்பி, பெங்களூர், மங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!

கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பான் இந்தியா’ திரைப்படமான ‘ரேவ் பார்ட்டி’ வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜு போனகானி கூறுகையில், “ஒரே கட்டமாக சுமார் 35 நாட்களில் படத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் படத்தை ஒரே கட்டமாக முடிக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

கண் முழித்த அப்பத்தா..! கை ரேகைக்காக நடக்கும் போராட்டம்.. 'எதிர்நீச்சல்' சீரியலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

பொதுவாக உடுப்பி, கோவா போன்ற இடங்களில் ரேவ் பார்ட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே ஒரு புதிய மற்றும் கலகலப்பான தோற்றத்தை கொடுக்க, இந்த அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இது போன்ற பார்ட்டிகள் எப்படி தொடங்குகின்றன, ரேவ் பார்ட்டிகள் என்று அழைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில் யார் ஈடுபடுகிறார்கள்? மற்றும் ஒரு ரேவ் பார்ட்டி இளைஞர்களுக்கு என்ன சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கதைக்களம் மற்றும் திரைக்கதை இளைஞர்களுக்கு பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.” என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்