பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை கஜோல், சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள கஜோல், நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் காஜலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில், நடிகை கஜோல் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என குறிப்பிட்டு தான் விலகுவதை அறிவித்து உள்ளார்.
நடிகை கஜோலுக்கு டுவிட்டரில் 36 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.4 கோடிக்கு மேல் பாலோவர்களும் உள்ளனர். இவ்வளவு பாலோவர்கள் இருந்தும் தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ள தனது இதர பதிவுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார் கஜோல். அவரின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் துரத்திய பிரச்சனைகள்... நயன் - விக்கி ஜோடி கடந்த ஓராண்டில் சிக்கிய சர்ச்சைகள் இத்தனையா..!
அதேவேளையில், நடிகை கஜோல் இதனை தான் அடுத்ததாக நடிக்க உள்ள தி குட் வைப் என்கிற திரைப்படத்தின் விளம்பரத்திற்காக செய்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலரோ அஜய் தேவ்கனை விவாகரத்து செய்யப்போகிறீர்களா என்றெல்லாம் கேட்டு வருகின்றனர்.
இப்படி கஜோல் சமூக வலைதளத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது எதற்கென தெரியாமல் பலரும் பல தகவல்களை பரப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்றால் நடிகை கஜோல் தான் விளக்கம் அளிக்க வேண்டும், அவர் இதுகுறித்து என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3
— Kajol (@itsKajolD)இதையும் படியுங்கள்... எனக்கு மட்டும் கல்யாணம் ஆகலேனா... கண்டிப்பா தனுஷை தான் கரம்பிடித்து இருப்பேன் - தனுஷ் மீதான காதலை சொன்ன நடிகை