படுக்கையில் அழுது கொண்டிருந்த குட்டிக் குழந்தை ஒன்று செல்போனில் ஓடிய விஜய்யின் ரஞ்சிதமே பாடலைக் கண்டதும், அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது அவருக்கு வயது 50-ஐ நெருங்கினாலும், இன்னும் இளமை மாறாமல் இளம் நடிகர்களுக்கு இணையாக நடனமாடி அசத்தி வருகிறார் விஜய். அவரின் நடனத்துக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த வயதிலும் எப்படி அசாத்தியமாக நடனமாடுகிறார் என விஜய்யை பார்த்து இளம் நடிகர்களே வியக்கும் அளவுக்கு படத்துக்கு படம் அவரின் நடனம் மெருகேறி வருகிறது.
விஜய் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங், பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ஆகிய பாடல் வைரல் ஹிட் அடித்தன. இந்த பாடல்கள் யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவிக்க முக்கிய காரணம் விஜய்யின் நடனம் தான். மூன்று பாடல்களிலுமே அதகளம் செய்திருப்பார்.
இதையும் படியுங்கள்... சார்பட்டா ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் நடிக்கும் மிஸ்ட்ரி-திரில்லர் படம் ‘பர்த்மார்க்’!
இந்த பாடல்கள் அனைத்தும் குழந்தைகளை மிகவும் கவரும் விதமாக அமைந்திருந்தது. அதிலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் குழந்தைகளின் பேவரைட் சாங் ஆக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இந்தப்பாடலுக்கு குழந்தைகள் நடனமாடும் ஏராளமான ரீல்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் உலா வருவதை பார்க்கலாம்.
படுக்கையில் அழுது கொண்டிருந்த குழந்தை செல்போனில் ஓடிய விஜய் நடித்த வாரிசு பட பாடலைக் கண்டு சிரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது pic.twitter.com/Cy4j6l2mNf
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அந்த வகையில், படுக்கையில் அழுது கொண்டிருந்த குட்டிக் குழந்தை ஒன்று செல்போனில் ஓடிய வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலைக் கண்டதும், அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்யின் நடனத்தை பார்த்து சிரிக்கும் அந்த குழந்தையின் வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பிஞ்சு குழந்தைக்கும் பிடித்தமான ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்பதற்கு இந்த வீடியோவே ஒரு சான்று.
இதையும் படியுங்கள்... முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்