புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள போர் தொழில் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் போர் தொழில். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைக்கிறார். இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். போர் தொழில் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கிரைம் திரில்லர் படமாக இது இருக்கும் என படம் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். ஒருசிலரோ ராட்சசன் படத்துக்கு நிகராக இப்படத்தை ஒப்பிட்டு வருகின்றனர். இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் அதன் விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்... என்றென்றும் மறக்கமாட்டேன் - தமன்னா நெகிழ்ச்சி
போர் தொழில் படம் பார்த்த நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி, இப்படம் மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. சரத்குமார் சார் அமேசிங், அசோக் செல்வன் நடிப்பு செம, நிகிலா விமலும் சூப்பராக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இறுதியாக வின்னர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
was really good…! Too many things to like in this gripping thriller.! sir you were amazing and sema..! you were too good, so was ..! Congratulations to director Vignesh and his entire team of technicians…! ❤️
— RJ Balaji (@RJ_Balaji)நடிகர் கவுதம் கார்த்திக் பதிவிட்டுள்ளதாவது : “இறுதிவரை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கும் அருமையான திரில்லர் படமாக போர் தொழில் உள்ளது. சரத்குமாரின் நடிப்பு பயங்கரமாக இருந்தது. அசோக் செல்வன் மாம்ஸ் மற்றுமொரு தரமான பர்பார்மன்ஸ் கொடுத்து நீ மறுபடியும் நிரூபிச்சிட்ட ஹாப்பியா இருக்கு. விக்னேஷ் ராஜா அருமை. படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Amazing thriller! Was on the edge of my seat till the end! sir, your performance was intense! super happy for you maams! You've done it again! Another rocking performance! just wow!
Wishing the entire team a grand success😊
நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளதாவது : “போர் தொழில் என்ன ஒரு அருமையான படத்தை கொடுத்துள்ளார் விக்னேஷ் ராஜா. சீட் நுனியில் பார்க்கும் அளவுக்கு செம்ம திரில்லர் படமாக உள்ளது. சிம்ப்ளி சூப்பர். சூப்பராக நடித்துள்ளார் அப்பா மற்றும் அசோக் செல்வன் சொல்ல வார்த்தைகள் இல்லை, வேறலெவல் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
What a fantastic film by A total edge of the seat thriller.. not a single moment to breath.. simply superb..kudos to you..superbbbbbbbb nail biting performances by daddy & no words just outstanding..book your tickets… pic.twitter.com/CrSWH8G3zj
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5)நடிகர் ஆதவ் கண்ணதாசன் போட்டுள்ள டுவிட்டில், தமிழ் சினிமாவின் தலைசிறந்த மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படங்களில் ஒன்றாக போர் தொழில் உள்ளது. அசோக் செல்வன் மச்சான் நீ நேச்சுரல் பர்பார்மர் டா. சரத்குமார் சார் சூப்பர். விக்னேஷ் ராஜாவுக்கு இது சிறந்த அறிமுக படமாக இருக்கும். நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டி உள்ளார்.
One of the best Murder Mystery Thrillers In Tamil Cinema ! Macha your a natural performer da 🤗❤️ killed it Wow superb performance sir, looking great in this 🤩
Congratulations Brother - a great debut 👌🏾 👏🏻
மேற்கண்ட விமர்சனங்களைவிட மிகவும் ஹைலைட் ஆனது ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் தான். பொதுவாகவே படங்களைப் பற்றி கழுவிஊற்றும் இவர், போர் தொழில் படத்தை பாராட்டி தள்ளியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தை மிஸ் பண்ணாம தியேட்டர்ல பாருங்க எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனே பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் இப்படத்துல அப்படி என்னதான் இருக்கு என்பதை காண ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Por Thozhil. Exciting thriller. Starring Ashok Selvan and Sarathkumar. Directed by Vignesh Raja.
Releasing today in theatres. Do not miss. pic.twitter.com/5Tqkgntz2Y
இதையும் படியுங்கள்... ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை... வேறுவழியின்றி 40 வயது நடிகையுடன் ஜோடி சேரும் தனுஷ்!