அப்பத்தாவின் மொத்த சொத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று குணசேகரன் தீவிரம் காட்டி வர, மற்றொரு ஆதிரையை மருமகளாக்கி கொள்ள, ஜான்சி ராணி செய்யும் செயல்கள் தான் இன்றைய ஹை லைட்.
சன் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், பல இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆணாதிக்க தன்மையோடு, பெண்கள் தங்களுக்கு அணிபணித்தே தான் இருக்க வேண்டும் என நினைக்கும் குணசேகரனுக்கு, ஜனனி கொடுக்கும் பதிலடிகள் மற்றும் வீட்டில் உள்ள பெண்களின் உரிமையை மீட்டெடுக்க போராடுவதே எதிர்நீச்சல் சீரியலின் கதை களம்.
இத்தனை நாட்களாக ஆதிரையின் திருமணத்தை வைத்தே சீரியலை ஓட்டி கொண்டிருந்ததால், ரசிகர்களுக்கு சிறு அலுப்பு தட்டியது. ஆனால் தற்போது கதைகளால் வேறொரு கோணத்தில் திரும்பி உள்ளது இந்த சீரியலின் மீதான சுவாரசியத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக ஜீவானந்தம் என்கிற கேரக்டர் என்ட்ரிக்கு பின்னர் கதை தூள் பறக்கிறது என் எனலாம்.
தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!
குணசேகரின் சூழ்ச்சியால், கோமா நிலைக்கு சென்ற அப்பத்தா தற்போது கண் முழித்து விட்டார். கண் முழித்த உடனையே ஜீவானந்தத்திடம் பேச வேண்டும் என கூற, ஜனனியும் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். பலமுறை போன் போட்டோம் ஜீவானந்தம் போனை எடுக்கவில்லை. ஜானவி - ஜீவானந்தம் இருவரும் அப்பத்தாவின் சொத்துக்களை காப்பாற்ற அவரின் கை ரேகையை பெற முயற்சிக்கும் நிலையில், மற்றொரு புறம்... அப்பத்தாவின் சொச்ச... மிச்ச சொத்துக்களையும் ஆட்டையை போடா குணசேகரன், ஆடிட்டரின் உதவியோடு அப்பத்தா கைரேகையை பெற முயன்று வருகிறார்.
விக்ரம் முதல் விஜய் சேதுபதி வரை... கூச்சமே இல்லாமல் திருநங்கை கெட்டப்பில் பொளந்து கட்டிய நடிகர்கள்!
கைரேகை போராட்டம் ஒரு பக்கம் அனல் பறக்க சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவவும்... இன்றைய எபிசோட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. குணசேகரன், நமக்கு தெரியாமலேயே ஏதோ சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக தம்பி கதிரிடமும், ஞானத்திடமும் கூறுகிறார்.
ஜான்சி ராணியோ தன்னுடைய மகனுக்கு, ஆதிரையை திருமணம் செய்து வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ஆதிரையிடம் ஒரு புடவையை கொடுத்து இதை போய் கட்டிக்கிட்டு வந்து என் புள்ள பக்கத்துல நில்லு என சொல்ல, அதற்கு அவர் எனக்கு பிடிக்கல எனக்கு கூற, புடவை மட்டும் தான் பிடிக்கலையா இல்லை என் பிடிக்கலையா என கேட்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.