
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இந்த கதாநாயகி, ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: பிளாக் பிகினியில்... முழு கால்களையும் காட்டி 'பில்லா' நயன்தாராவுக்கே செம்ம டஃப் கொடுக்கும் பூனம் பாஜ்வா!
பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 'புஷ்பா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் நாயகி ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: ஹீரோயின் வயதில் மகள்கள் இருந்தாலும்... என்றும் இளமையோடு ஜொலிக்கும் 5 தமிழ் சினிமா நடிகைகள்!!
திருமணத்திற்கு தயாராவது போல், பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து காதில் கம்மல் அணிவது போல் இந்த போஸ்டரில் உள்ளார். இவர் பக்கத்தில் கண்ணாடி மற்றும் பட்டு புடவை, பூ போன்றவை உள்ளது. ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரமாகவே மாறி அழகில் ஜொலிக்கிறார் ராஷ்மிகா. தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.