
ரன்வீர் சிங்
பல தடைகளுக்கு பின் வெளியான பத்மாவத் படத்தில், பத்மாவதியை அடைய துடிக்கும் கொடூர வில்லனாக அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பவர் ரன்வீர் சிங். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ஹீரோயின் தீபிகாவை விட, ரன்வீர் சிங்கின் நடிப்பு அனைவராலும், வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
காதலர்கள்
2010 ம் ஆண்டு வெளியான "பேண்ட் சர்மா பாராத்" படத்தின் மூலம் அறிமுகமானார் ரன்வீர் சிங். இந்த படத்தில் அனுஷ்கா சர்மா ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2013 ம் ஆண்டு வெளியான "ராம் லீலா" படத்தில் ரன்வீரும், தீபிகா படுகோனேவும் ஜோடி போட்டு நடித்தனர். அதிலிருந்து இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது.தற்போது இருவரும் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.
நடிக்கும் படங்கள்
பத்மாவத் படத்தை தொடர்ந்து ரன்வீர் சிங் தற்போது "குல்லி பாய்", "சிம்பா" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆங்கில மொழியில் நடிக்க ஆவல்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரன்வீரிடம், நீங்கள் ஆங்கில மொழி படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரன்வீர் சிங் , ஆங்கில மொழியில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் பள்ளியில் படித்த போது ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். ஆங்கிலம் எனது முக்கிய மொழிப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. நான் அமெரிக்காவில் படித்தவன். அதனால் எனது இன்னொரு மொழியாக ஆங்கிலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆங்கில படங்களில் நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் சரியான நேரம் வரும் போது, சரியான படத்தில் நடிப்பேன் என நினைக்கிறேன். அதிலும் நல்லதொரு சிறப்பான, நடிப்பை வெளிப்படுத்துவேன் என நினைக்கிறேன் என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.