
ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விஒழாவிற்கு வருகை புரிந்த நடிகை தமன்னா மீது ரசிகர் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நகை கடைதிறப்பிற்கு வந்திருந்த நடிகை தமன்னாவை பார்க்க ஏகப் பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர் .திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த கரிமுல்லா என்ற நபர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி வீசி எறிந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் ,சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாக கைதான கரிமுல்லா தெரிவித்து உள்ளார்.
நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து,அவரை கைது செய்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.