
சொகுசு கார் வங்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை அமலா பால் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமி திரைப்படங்களில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து நிமிர்ந்து நில், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் இயக்குநர் விஜயைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில மாதங்களுக்குள் அவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு , சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு வேலையில்லா பட்டதாரி, திருட்டும் பயலே 2 போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அமலா பால் சில மாதங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் ரா கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த அமலா தாம் புதுச்சேரியில் வசிப்பதாக கூறி போலியான முகவரி அளித்து அந்த காரை பதிவு செய்தார்.
கேரளாவில் பதிவு செய்தால் 20 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டம் ஆனால் புதுச்சேரியில் வாங்கியது போல் கட்டினால் 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி.
இதன் மூலம் 18 லட்சம் ரூபாய் அளவுக்கு அமலா பால் வரி ஏய்ப்பு செய்ததாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் அமலா பால் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் நடிகை அமலா பால் ஆஜரானார். அப்போது காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
ஆனால் அமலா பால் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் கைது செய்யப்பட்டவுடன் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். நடிகை அமலா பால் கைது செய்யப்பட்டது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.