யோகி பாபு ஸ்டைலில் காதல் வசனம் பேசிய தொகுப்பாளினி ரம்யா! எழுந்த சென்ற மைலு! (வீடியோ)

Published : Apr 11, 2019, 06:12 PM IST
யோகி பாபு ஸ்டைலில் காதல் வசனம் பேசிய தொகுப்பாளினி ரம்யா! எழுந்த சென்ற மைலு! (வீடியோ)

சுருக்கம்

விஜய் தொலைக்காட்சியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ரம்யா. இவரின் ஸ்டைலிஷான ஆங்கில பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.  

விஜய் தொலைக்காட்சியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ரம்யா. இவரின் ஸ்டைலிஷான ஆங்கில பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்த இவர், அதில் இருந்து மீள,  வெயிட் லிப்ட்டிங், பரதம், நடிப்பு, மேடை நாடகங்கள் ஆகியவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். 

இதுவரை, மாஸ், மங்காத்தா, ஓகே கண்மணி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது கதாநாயகியாகவும் மாறியுள்ளார். 

சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவருடைய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் அவருடைய செல்ல பிராணி மைலுவுடன்... 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபு நயன்தாராவை பார்த்து பேசும் காதல் வசனத்தை இவர் மைலுவை பார்த்து பேசியுள்ளார்.

இவர் பேசி போர் அடிப்பதை தாங்க முடியாமல் மைலு விட்ட போதும் என எழுந்த காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

அந்த வீடியோ இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!