பொள்ளாச்சியில் 50 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்திய ஜீ.வி.பிரகாஷ்குமார்...

Published : Apr 11, 2019, 05:34 PM IST
பொள்ளாச்சியில் 50 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்திய ஜீ.வி.பிரகாஷ்குமார்...

சுருக்கம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள ‘வாட்ச் மேன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பொள்ளாச்சியைச் சுற்றி 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தி பொதுமக்கள் பாதுகாப்புக்கான வாட்ச்மேன் வேலையை செவ்வனே செய்துள்ளனர்.  

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள ‘வாட்ச் மேன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பொள்ளாச்சியைச் சுற்றி 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தி பொதுமக்கள் பாதுகாப்புக்கான வாட்ச்மேன் வேலையை செவ்வனே செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவி செய்யும் வகையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’வாட்ச்மேன்’ படக்குழு சார்பில், 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கப்படும் என்று படத்தயாரிப்பாளர்கள் சார்பில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட்டது.

அப்போது அவ்விழாவில் தயாரிப்பாளர்களின் அம்முயற்சிக்கு நன்றி தெரிவித்துப்பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ்,” நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். நீங்கள்  அதைவிட ஒரு படி உயர்ந்து பெண்களின், பாதுகாப்புக்கு என்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அங்கு சிசிடிவி பொருத்தும் உங்கள் முயற்சிக்காக என்னால், முடிந்த உதவிகளை நான் செய்வேன்”என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படக்குழு சார்பில் பொள்ளாச்சிக்கு 50 சிசிடிவி கேமராக்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சி நகரின் முக்கிய இடங்களில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவிகரமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள அத்தனை இடங்களிலும் ‘வாட்ச்மேன்’ பட பேனர்களும் தவறாமல் இடம்பெற்றுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!