நடிகை த்ரிஷாவுக்காக கதை, திரைக்கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்...

Published : Apr 11, 2019, 05:02 PM ISTUpdated : Apr 12, 2019, 10:19 AM IST
நடிகை த்ரிஷாவுக்காக கதை, திரைக்கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்...

சுருக்கம்

‘தர்பார்’ பட ஷூட்டிங் பிசியிலும் நடிகை த்ரிஷாவை ஹீரோயினாக வைத்து தனது உதவியாளர் இயக்கும் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளரையும் தாரை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘தர்பார்’ பட ஷூட்டிங் பிசியிலும் நடிகை த்ரிஷாவை ஹீரோயினாக வைத்து தனது உதவியாளர் இயக்கும் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளரையும் தாரை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்து அடுத்து ‘இவன் வேற மாதிரி’,’வலியவன்’ படங்களை இயக்கியவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிண்டவர். இடையில் ஒரு சிறிய விபத்தில் சிக்கியதால் படங்கள் இயக்காமல் ஓய்வெடுத்த வந்த சரவணன் மீண்டும் உடல்நலம் தேறி படம் இயக்கத்தயாரானபோது, அவருக்குத் தானே முன்வந்து உதவத் தயாரானர் குருநாதரான முருகதாஸ்.

அதன்படி நடிகை த்ரிஷாவை வைத்து தான் இயக்க முடிவெடுத்திருந்த ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை சரவணன் இயக்கக்கொடுத்ததோடு, ரஜினி பட பிசிக்கு நடுவில் அக்கதைக்கு திரைக்கதையும் அமைத்துக்கொடுத்திருக்கிறார். தற்போது லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

முருகதாஸின் ‘தர்பார்’ படத்தைத் தயாரிக்கும் அதே லைகா புரடக்‌ஷன்ஸே இப்படத்தையும் தயாரிக்கிறது எனும்போது தயாரிப்பாளரை சிபார்சி செய்தவர் யார் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அவதார் 3 படத்துக்கே தண்ணிகாட்டிய துரந்தர்... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை தட்டிதூக்கி சாதனை
நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?