6 பேக்கில் தோன்றி... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

Published : Apr 11, 2019, 05:26 PM IST
6 பேக்கில் தோன்றி... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் நடிப்பாலும், அழகாலும் கவர்ந்தவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி  வருகிறார்.  

தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் நடிப்பாலும், அழகாலும் கவர்ந்தவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி  வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில்... இவரின் துணிச்சலான கதாப்பாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் தேசிய அளவிலான ஊடகங்களிலும் சமந்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

சமீப காலமாக உடல் பயிற்சி மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள சமந்தா, தற்போது 6 பேக் உடல் காட்டுக்கு ஆயத்தமாவதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். 

இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், 6 பேக் வைப்பதற்கான முயற்சி எடுப்பதும், உடல் கட்டுகளும் தெரிகிறது. ஏற்கனவே நடிகை ரெஜினா, 6 பேக் வைத்து அசத்தினார். அவரை தொடர்ந்து சமந்தாவின் இந்த முயற்சி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அவதார் 3 படத்துக்கே தண்ணிகாட்டிய துரந்தர்... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை தட்டிதூக்கி சாதனை
நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?