நடிகை ரம்யா பாண்டியன், தன்னுடைய காதலரை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், காதலருடன் வெளியிட்டுள்ள ரொமான்டிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய சினிமா பின்புலம் இருந்தும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முயற்சியால் மட்டுமே சினிமாவில் உயர நினைத்தவர் ரம்யா பாண்டியன். இவர் அறிமுகமான 'டம்மி டப்பாசு' திரைப்படம் தோல்வியை தழுவிய போதிலும், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் ரம்யா பாண்டியனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில், கிராமத்து பெண்ணாக மிகவும் எதார்த்தமான நடிப்பை ரம்யா பாண்டியன் வெளிப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அணைத்தும் சரியாத கதை தேர்வு இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரம்யா பாண்டியன், தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் மொட்டை மாடியில் இடையழகை காட்டியபடி எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் மனதில் இடம்பிடிக்க சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கடந்து கொண்டார்.
இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரம்யா பாண்டியனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த நிலையில், இதை தொடர்ந்து பட வாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தரமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ரம்யா பாண்டியன், சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய நபராக உள்ளார். மேலும் இவரை சுமார் 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள். 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒருவழியாக தற்போது தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.
சீரியல் நடிகையிடம் 50 சவரன் நகையை ஆட்டையை போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்திய பைலட் மாப்பிள்ளை!
நடிகை ரம்யா பாண்டியன் சமீப காலமாகவே யோகாவில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். மேலும் இவர் ரிஷிகேஷ் சென்ற போது, அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்று வந்தார். சில மாத பயிற்சி வகுப்புக்கும் பின்னர் அவர் யோகா டீச்சராக தகுதியானவர் என்கிற சான்றிதழும் வழங்கப்பட்டது. அங்கு ரம்யா பாண்டியனுக்கு பயிற்சி கொடுத்தவர் தான் லோவல் தவான் என்கிற யோகா பயிற்சியாளர்.
கடந்த ஒரு வருடமாகவே இருவரும் ரகசியமாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களின் திருமணம் ரிஷிகேஷில்... கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள பிரபல கோவில் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா பாண்டியன் முதல் முறையாக தன்னுடைய காதலருடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.