நீ நினைக்குற பொண்ணு நான் இல்ல அர்னவ்! கையில் குழந்தையோடு பளார் என அறைவிட்ட திவ்யா ஸ்ரீதர்!

By manimegalai a  |  First Published Oct 22, 2024, 3:24 PM IST

கேளடி கண்மணி சீரியல் நாயகன், நாயகி நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு பின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் மனைவி கர்ப்பமாக இருந்த போது அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், மனைவி தன்னுடைய குழந்தையுடன் வெளியிட்டுள்ள ரீல்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் சிலர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் கேளடி கண்மணி சீரியலில் அர்னவ் ஹீரோவாக நடித்த போது, அந்த சீரியலில் நாயகியாக நடித்த திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பின்னரே திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம், திவ்யா குடும்ப வழக்கப்படி இந்து முறைப்படியும், அர்னவ் குடும்ப வழக்கப்படியும் நடந்தது. அர்னவ் சீரியல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது திவ்யா தான் அர்னவை பார்த்து கொண்டதாக பேட்டிகளில் கூறி இருந்தார்.

அர்னவுக்கு மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்த போது தான், திவ்யா ஸ்ரீதர் வாழ்க்கையில் மீண்டும் புயல் வீச துவங்கியது. அந்த நேரத்தில் அர்னவ் மூலம் திவ்யா கர்ப்பமான நிலையில், தங்களின் திருமண உறவை வெளிப்படுத்த நினைத்து, திருமண புகைப்படங்களை அவர் வெளியிட, அதை நீக்க வேண்டும் என கூறி அர்னவ் சண்டை போட்டு, திவ்யா ஸ்ரீதரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். மேலும் 'செல்லம்மா' சீரியல் நடிகை அன்ஷிதாவுடன் அர்னவுக்கு தொடர்பு இருந்தது திவ்யாவுக்கு தெரிய வந்தது.

Tap to resize

Latest Videos

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

இருவரும் கருவில் உள்ள குழந்தையை கலைக்க சொல்லி மிரட்டுவதாக திவ்யா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் இருந்தபடி கொடுத்த பேட்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரத்தையே பரபரக்க செய்தது. பின்னர் போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்... இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

அர்னவ் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தற்போது சென்றுள்ள நிலையில், மீண்டும் திவ்யா மற்றும் அர்னவ் பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் திவ்யா தன்னுடைய குழந்தையை கையில் வைத்து கொண்டு, செய்துள்ள ரீலிஸ் அர்னாவுக்கு பளார் விடும் விதத்தில் உள்ளது என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த ரீல்ஸில்... கணவர் அடிக்கும் போது, மனைவி திருப்பி அடித்து, நீ அடிச்சா வாங்கிட்டு போற பொண்ணு நான் இல்ல என கூறும் போது, கணவர் ஏய் என கூறி மிரட்டுவார். அப்போது மனைவி, என்ன பண்ணுவ என பெண் சிங்கம் போல் கெத்தாக கர்ஜிப்பது போல் இருக்கும். 

1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!

இப்படி ஒரு ரீலிஸ் திவ்யா போட்டு இருந்தா.. அது கண்டிப்பா அர்னவுக்கு தானே பாஸ். பட் சரியான நேரத்தில் இதை போட்டிருப்பது தான் ஹை லைட்.

 

click me!