நடிகர் பாலா தனது மாமா மகள் கோகிலாவை கலூர் பவக்குளம் கோவிலில் மறுமணம் செய்து கொண்டார். ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்க மறுமணம் செய்யப் போவதாக பாலா அறிவித்திருந்தார்.
நடிகர் பாலா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பவக்குளம் கோவிலில் நடைபெற்றது. அவர் தனது மாமா மகள் கோகிலாவை மணந்துள்ளார். மறுமணம் செய்யப் போவதாக பாலா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் ஊடகவியாளர்களுடன் நடந்த உரையாடலின் போது, பாலா மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார், மேலும் ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்கள் நிர்வகிக்காமல் விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், அப்போது தனது மணப்பெண் யார் என்பதை அவர் வெளியிடவில்லை.
undefined
பாலாவின் முன்னாள் மனைவியுடனான உறவு சமீபத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியது. 2019 இல் அவர் விவாகரத்து செய்தார், மேலும் அவரது முன்னாள் மனைவி தனது மகளைப் பார்ப்பதைத் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஒரு தந்தையாக தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக பாலா கூறி இருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. பின்னர் அவரது மகளே முன்வந்து, தந்தை மீது குற்றம்சாட்டினார். தனது தாயை தந்தை துன்புறுத்தியதாக கூறி இருந்தார். தனது தந்தை பொய் பேசுவதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாலா குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாலாவின் மகள் சைபர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். அவரது முன்னாள் மனைவியும் ஒரு வீடியோ மூலம் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார், நீண்ட காலமாக அவர் அமைதியாக இருந்ததாகவும், மகள் குறித்து பிரச்சனைகள் எழும்போது தன்னால் பேசாமல் இருக்க முடியவில்லை என்று கூறி இருந்தார். தங்கள் மகளைப் பற்றிய தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் எப்படி ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பாலா சமீபத்தில் தனது உடல்நிலை மற்றும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் பேசினார். “எனது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கும் ஆதரவு தேவைப்பட்டது. நான் தனியாக இருக்கும்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று முந்தைய ஒரு நேர்காணலில் கூறியிருந்தேன். நான் இப்போது எனது உணவுமுறையைக் கவனித்துக் கொள்கிறேன், மருந்து எடுத்துக்கொள்கிறேன். எனது உடல்நிலை மேம்பட்டுள்ளது, நல்ல நிலையில் முன்னேற முடியும். முடிந்தால் இதயபூர்வமாக ஆசீர்வதியுங்கள்,” என்று அவர் கூறினார்.