
சிகரெட், குடிப்பழக்கத்தை முழுமையாக கைவிடுங்கள் முழுமையாக கைவிடுங்கள் என கூற தாம் ஒன்றும் யோகி இல்லை என்றும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று முதல் 5 நாட்களுக்கு சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கிறார். இந்த விழா சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல் கட்டமாக இன்று கரூர், திண்டக்கல் , கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் குடிப்பழக்கத்தால் மனநிலையும் பாதிக்கப்படும். சிகரெட், குடிப்பழக்கத்தை முழுமையாக விடுங்கள் என சொல்ல யோகி இல்லை என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் படப்பிடிக்கு தாமதமாக சென்றதாகவும் அப்போது இயக்குநர் முத்துராமன் அறிவுரை கூறியதால் படப்பிடிக்கு முதல் ஆளாக செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.