
குடிப் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்றும், அது குடும்பத்தை கவனிக்க முடியாமல் போய்விடும், மனதை கெட்ட செயல்களுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்குப் பின் தனது ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடை பெற்றது.
இன்று கரூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சச்தித்துப் பேசினார்.
முன்னதாக இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ரசிகர்களை வரவேற்றுப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பேசிய ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம்தான் தான் ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
ஆரம்பத்தில் குடிப்பழக்கத்தினால் தொடர்ந்து படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும், அப்போது தன்னை அழைத்துப் பேசிய முத்துராமன், ரஜினி நீ தான் படத்துக்கு கதாநாயகன்,,,நீ முதலில் வந்தால் தான் மற்றவர்கள் குறித்த நேரத்தில் வருவார்கள்…மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதனை ஏற்றுக்கொண்ட இன்று அவரை நான் படப்பிடிப்புக்கு சரியான ரேநத்தில் வந்த விடுவதாக குறிப்பிட்டார்.
சில அரசியல்வாதிகள் எனது பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள்.
மேலும், எனது ரசிகர்களை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால், பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று கூறி்னார்.
இன்று நடிகனாக இருக்கும் என்னை நாளை என்னவாக இருக்க வேண்டும் என்பதை கடவுள் முடிவெடுப்பார். என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமாக, நேர்மையாகவும் செயல்படுவேன் என்று கூறினார்.
ரசிகர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கத்தை ரசிகர்கள் அறவே தவிர்த்துவிட வேண்டும் அது மனதை கெட்ட செயல்களுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.