Rajinikanth with Ilaiyaraja : ரஜினி நடிக்க, ராஜா இசைக்க, மிஷ்கின் இயக்க.. வர்ரே வாவ்! ப்ராஜெட்..!!

By Ganesh RamachandranFirst Published Dec 28, 2021, 3:23 PM IST
Highlights

"கபாலி மற்றும் காலாவில் நீ எடுத்த முயற்சி சரி. ஆனா வீணா எதுவும் பிரசார நெடிக்குள் சிக்கிக்காத.’ என்று அழுத்தமாக அட்வைஸ் வந்துள்ளதாம்...

நீங்க நம்பலேன்னாலும் அதுதான் நெசம்! ரஜினி இப்போது அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்திக்க துவங்கியிருக்கிறாராம் தனது அடுத்த படம் குறித்து.

அதாவது, அண்ணாத்த படத்திற்கான வரவேற்பு எப்படி? என்பதை இங்கே நாம் திருத்தமாக சொல்லி பலரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், ‘நான் யானை இல்ல. விழுந்தா எழுந்திரிக்க முடியாம துடிக்கிறதுக்கு. நான் குதிர, விழுந்தாலும் எழுந்து ஸ்பீடா ஓடுவேன்’ என்று அன்றே பேசிய ரஜினியின் மனசு என்னா சொல்லுது கண்ணா? என்று ஸ்கேன் செய்ய வேண்டிய கடமையுணர்வு நமக்கு இருக்கிறது. ஏன்னா, தமிழர்களின் ரத்தத்தில் கலந்தது  சினிமா.

அண்ணாத்த!யை உலகமே ‘பப்பு வேகலப்பு’ என்று விமர்சித்தாலும் கூட, ரஜினிகாந்த் மட்டும் கண்கள் கலங்கிட இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டினார், சமீபத்தில் அப்படத்தில்  பணியாற்றிய முக்கிய கலைஞர்களை சந்தித்து பரிசளித்து உற்சாகப்படுத்தினார். காரணம், தன்னை நம்பி பணம் போட்ட பெரிய நிறுவனத்தின் ‘வருவாய்க்காக’வும், தன்னை தாங்கிப் படமெடுத்த நபர்களை விட்டுத் தரக்கூடாது என்ற எண்ணத்திலும்தான் இதையெல்லாம் அவர் செய்தார். ஆனாலும் கூட அவரது மனதிற்குள், ’இப்படியொரு சறுக்கல் வந்துடுச்சே!’ என்று ஒரு கடுப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில்தான், மேற்படி அண்ணாத்த க்ரூவுடனான சந்திப்பிற்குப் பின் தன்னிடம் வெகு ஓப்பனாக பேசக்கூடிய, தனது குறைகளை தயங்காமல் சுட்டிக்காட்டக் கூடிய நண்பர்களையும் அதேப்போல் அழைத்துப் பேசினார் ரஜினி. அப்போது ‘இந்த வயசிலேயும் அனிருத் மியூஸிக்கிற்கு உன்னால ஆட முடியும், சிவா சொல்லும் ஆக்‌ஷன் ஸீனுக்கு நடிக்க முடியும்! அப்படிங்கிறதெல்லாம் சரிதான். நீ இன்னமும் உன்னை ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியமில்ல. கொஞ்சம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்திக்கணும் நண்பா நீ.

அமிதாப் பண்ணாத மாஸ் படங்களா? ஆனா அவர்  கதையை நம்பி நடிக்க ஆரம்பிச்சு பல வருஷங்களாயிடுச்சு. அதனால அப்படி யோசி. இளையராஜா இசை! ராம், மணிரத்னம், மிஷ்கின் மாதிரியான இயக்குநர்களின் இயக்கம்! அப்படின்னு ட்ராவல் பண்ணு. கபாலி மற்றும் காலாவில் நீ எடுத்த முயற்சி சரி. ஆனா வீணா எதுவும் பிரசார நெடிக்குள் சிக்கிக்காத.’ என்று அழுத்தமாக அட்வைஸியுள்ளனர். இதைத்தொடர்ந்து ரஜினி அழுத்தமாகவே இதைப்பற்றி சிந்திக்க துவங்கியுள்ளாராம்.

ரஜினி நடிக்க, இளையராஜா இசைக்க, மிஷ்கின் இயக்க!.... வர்ரே வாவ்!ல. ஆனால், மாஸ் இயக்குநர்கள் ரஜினியை மீண்டும் குழப்பாமல் இருந்தால் இந்த தென்றல் வீச வாய்ப்புள்ளது சாத்தியமே.

click me!