
பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ஆச்சாரியார் ரவி என பெயர் வந்தது. அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான், அரவிந்த சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே, பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதில் ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இந்த படம் அந்நாட்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உடல்நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.