
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டி நெருங்கி வருவதால், கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக வருண் மற்றும் அக்ஷரா ஆகிய 2 போட்டியாளர்கள் வெளியேற்றட்டனர். தற்போது ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், பாவனி, தாமரைச் செல்வி, நிரூப், சிபி ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்களுக்கு டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்படுகிறது.
இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார். அதனால் இதனை வெல்ல அனைத்து போட்டியாளர்களும் முனைப்பு காட்டுவது வழக்கம்.
இழியில் இன்று வெளியான ப்ரோமோவில் டாஸ்க் குறித்த வாக்குவாதத்தில் பிரியங்கா-தாமரை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தாமரை ஆத்திரத்தில் பிரியங்கவை தள்ளி விடுகிறார். இதனால் கடுப்பான பிரியங்கா தாமரையை கடும் கோபத்துடன் தாக்குகிறார்.
பின்னர் இது குறித்து கேட்ட பாவனியிடம் இனிமேல் தாமரையிடம் எந்த சுழலிலும் பேசமாட்டேன் என பிரியங்கா தெரிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.