ரஜினியின் '165' படத்தின் பெயர் 'பேட்ட'

By sathish kFirst Published Sep 7, 2018, 6:15 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி, மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹாவையும் நடிக்கவும் நடித்து வருகிறார்.

அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரன் மற்றும் திருஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  டார்ஜிலிங், இமையமலை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பெயர் 'பேட்ட' என்று அறிவித்துள்ளனர்.  மேலும் இந்த் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


 

click me!