
தமிழில் ரசிகர்கள் மனதை விட்டு என்றென்றும் நீங்காத பல இனிமையான பாடல்களை பாடி பிரபலமானவர் உமா ரமணன் . 72 வயதாகும் இவர், நேற்று இரவு 7:45 மணியளவில் திடீர் என உயிரிழந்தார். இவரின் எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் சென்று தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் உமா ரமணனின் கணவர், AV ரமணன் .. உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "என் மனைவி உமா ரமணன் அவர்கள், 72 வயதில் இறைவனை சேர்ந்து விட்டார். மே ஒன்றாம் தேதி இரவு 7. 45 மணிக்கு, இதுபோல் நடக்கும் என நானும் எதிர்பார்க்க வில்லை. என் மகனும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் நான் கேட்டுக்கொள்கிறேன். பிரவைசி காரணமாகவும், இது மறைந்த உமா ரமணன் ஆசை என்றும் கூறியுள்ளார்.
உமா ராமன், கடந்த 1980-ம் ஆண்டு வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் அறிமுகமானவர். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். மேலும், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், உள்ளிட்ட பல பாடல்களை இளையராஜா மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.
இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் உமா ரமணன். இவரின் கணவர் AV ரமணனின் ஒரு பின்னணி பாடகர் என்றாலும், சன் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.