சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னிடம் 'ஜெயிலர்' படத்தின் கதையை விரிவாக கூற பத்து நாட்கள் அவகாசம் கேட்டதாக, இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், இன்று 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 'ஜெயிலர்' படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்..! வெறித்தனமான பர்ஃபாம்மென்ஸுக்கு தயாரான தமன்னா - அனிரூத்! வைரலாகும் வீடியோ!
குறிப்பாக சிவராஜ் குமார், ஜாக்கி ஷரீஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சற்று முன்னர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளதாவது, "நெல்சன் திலீப் குமார், தன்னை சந்தித்து கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடித்திருப்பதாக சொன்னேன். விஜய் நடித்து வரும் பீஸ்ட் ஷூட்டிங்கை 10 நாட்களுக்குள் முடித்து வைத்து வந்து, விரிவாக கதை சொல்வதாக கூறினார். நானும் அதற்க்கு சரி என கூற அவர் சென்று விட்டார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து, மீண்டும் 'ஜெயிலர்' கதையை விரிவாக சொன்னார். கதை அற்புதமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வீடியோ
மேலும் தன்னுடைய சினிமா கேரியரில் முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி வாசு, கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர்தான் முக்கியவானவர்கள். அவர்களுக்கு பின் தற்போது நெல்சன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த். மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை ரஜினிகாந்த் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.