ரஜினிக்கு நாலாவது இடம்.. விடாமல் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன் - கமெண்டில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

By Ansgar R  |  First Published Jul 28, 2023, 8:11 PM IST

பிரபல சினிமா விமர்சகர் மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறனுக்கு தமிழக சினிமா அரங்கில் அறிமுகமே தேவையில்லை என்றால் அது மிகையல்ல.


இவர் வெளியிடும் திரை விமர்சனத்தை காணவே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்றால், அவர் எப்படி அந்த படங்களை கலாய்த்து பேசுகிறார் என்பதை கேட்க மற்றொரு ரசிகர் கூட்டம் அவருக்கு பெரிய அளவில் உள்ளது. 

அதே நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் படங்களை பற்றி இவர் கலாய்த்து பேசும்பொழுது, அந்த ஹீரோவின் ரசிகர்களிடம், கமெண்ட்கள் மூலமாக பெரும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் வியாபார அடிப்படையில் கோலிவுட்டின் முதல் நான்கு ஹீரோக்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகர் விஜய் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனும், மூன்றாவது இடத்தில் தல அஜித்தும் இருந்த நிலையில், நான்காவது இடத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை குறிப்பிட்டு அந்த பதிவை போடிருந்தார். 

'வாத்தி' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!

அந்த பதிவிற்கு சிலர் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், ரஜினி ரசிகர்களிடையே அது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் இருப்பார் என்று கூறும் ரசிகர்கள், தற்பொழுது அவர் போட்ட பதிவின் கமெண்ட்ஸ் செக்ஷனில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். 

Top 4 Tamil heroes - Ranking (Businesswise). Current position:

1. Vijay
2. Kamal
3. Ajith
4. Rajini. pic.twitter.com/I6fKpQ8hR6

— Blue Sattai Maran (@tamiltalkies)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான Hukum பாடல் ஒலிக்க, மாசாக நடந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

அனிருத் இசையில் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி அனைத்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, தனது மகளின் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்தபிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாலதீவுக்கு ஓய்வெடுக்க சென்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சில கால ஓய்வுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். அந்த பட பணிகள் முடிந்த பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

'ஜெயிலர்' ஆடியோ லான்ச்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வீடியோ

click me!