நடிகர் தனுஷை வைத்து 'வாத்தி' படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மானை வைத்து இயக்கம் படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' எனத் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அடுத்து தன்னுடைய பான் இந்திய படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்த்துள்ளார்.
வெங்கி அட்லூரி நடிகர் தனுஷூடன் ’சார்/வாத்தி’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய சமூகப் பொறுப்பைக் கொண்ட இயக்குநராக அவரது நற்பெயரை உயர்த்தியது. இதுமட்டுமல்லாது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைக் கொடுத்து, அவரை பான் இந்திய இயக்குநராக மாற்றியுள்ளது. இப்போது அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் 5 முக்கிய சீரியல்கள் பற்றி வெளியான தகவல்!
முன்பு, ‘சார்/வாத்தி’ படத்தைத் தயாரித்த, சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் தங்களது பேனர்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. மிகப் பெரிய பொருட்ச் செலவில் துல்கர் சல்மான் நடிப்பில் இந்தப் படம் உருவாகிறது எனவும், இந்த முறையும் மிக முக்கியமான கதைக்கருவையே வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் கதையை படக்குழுவினர், ’ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்கள்’ என்று வகைப்படுத்துகின்றனர். படத்தின் அறிவிப்பின் போதே இதன் தலைப்பு ‘லக்கி பாஸ்கர்’ என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
'சார்/வாத்தி’ படத்திற்கு இசையமைத்த தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்றொரு தேசிய விருது பெற்றவரான நவின் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார். மேலும் மற்ற விவரங்களைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.