'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பர்ஃபாம்மென்ஸ் செய்வதற்காக தமன்னா மற்றும் அனிருத் தயாராகி வரும் வீடியோவை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், முதல் முறையாக நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
BTS-ae fire ah iruku 🔥 apo Live performance? pic.twitter.com/KBGvt8OWNw
— Sun Pictures (@sunpictures)
மேலும் இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான காவாலா, இரண்டாவது சிங்கிலான ஹுக்கும் மற்றும் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜூஜூபி ஆகிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
. rehearsal is in full swing 💃🔥 pic.twitter.com/BWlInpnTy7
— Sun Pictures (@sunpictures) இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடிகை தமன்னா, காவாலா பாடலுக்கு லைவ் பர்ஃ பாமன்ஸ் செய்ய உள்ளார். அதேபோல் அனிருத்தும் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை பாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமன்னா மற்றும் அனிருத் மேடையில் லைவ் பர்ஃபார்மென்ஸ் செய்ய ரிகர்சல் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.