முன்னணி நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த தனுஷ் பொண்டாட்டி...விதவிதமான தினுசில் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா தனுஷ்

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 04, 2020, 07:14 PM IST
முன்னணி நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த தனுஷ் பொண்டாட்டி...விதவிதமான தினுசில் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா தனுஷ்

சுருக்கம்

யோகாசனத்தின் பெயரையும் அதை எப்படி செய்ய வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இன்ஸ்டாவில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என்ற பெயரை எடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாப்பிள்ளை தனுஷ். கடந்த ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் பட்டி, தொட்டி எல்லாம் தாறுமாறு ஹிட்டடடித்தது. அதனைத் தொடர்ந்து பொங்கல் விருந்தாக வெளியான பட்டாஸ் திரைப்படமும் 2020ம் ஆண்டு சிறந்த ஓப்பனிங்காக அமைந்தது.

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. என்ன தான் சூப்பர் ஸ்டார் மருமகனாக இருந்தாலும், தனது நடிப்பு திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவருக்கும் ரஜினிகாந்தின் முதல் மகளான ஐஸ்வர்யாவிற்கு 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 

இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

பாரத நாட்டிய கலைஞர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தான் யோகா செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக உடலை வில்லாக வளைத்து ஐஸ்வர்யா தனுஷ் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: இருட்டில் சுந்தர் சியை புரட்டி எடுத்த பிரபல நடிகை... பாத்டப்பிலும், படுக்கையறையிலும் செய்த படு அட்ராசிட்டி...!

யோகாசனத்தின் பெயரையும் அதை எப்படி செய்ய வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இன்ஸ்டாவில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். உடலை பராமரிப்பதில் முன்னணி நடிகைகள் காட்டும் அக்கறையை விட, மற்றவர்களும் தன்னைப் போல உடலை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணும் ஐஸ்வர்யாவின் உயரிய எண்ணம் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!