பெண்களிடம் ஆபாச பேச்சை அள்ளிவிட்ட மர்ம ஆசாமி! பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த விஜய் தேவரகொண்டா!

Published : Mar 04, 2020, 06:11 PM IST
பெண்களிடம் ஆபாச பேச்சை அள்ளிவிட்ட மர்ம ஆசாமி! பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த விஜய் தேவரகொண்டா!

சுருக்கம்

சமூக வலைதளங்களில் பிரபலங்களின், புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் பிரபலங்களின் பெயர்களில் போலியான முகநூல் பக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் கணக்குகள் துவங்கி, பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த மர்ம நபர் மீது தற்போது விஜய் தேவரகொண்டா சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, பெயரில் போலி கணக்கு ஒன்றை துவங்கிய அந்த மர்ம ஆசாமி, அதன் மூலம் பலருக்கு ரியூஸ்ட் கொடுத்து பேசத்துவங்கியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பி, அவரிடம் பெண்கள் பலர் சாட் செய்து வந்துள்ளனர். மேலும் அந்த மர்ம ஆசாமி, பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவின் நண்பர் மூலம் அவரின் பார்வைக்கு வந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியான அவர், தன்னுடைய மேலாளர் உதவியுடன் ஹேமா என்ற பெயரில் அந்த மர்ம ஆசாமியிடம் சாட் செய்ய வைத்து அதனை ஆதாரமாகக் கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில்,  போலீசார் தற்போது அந்த மர்ம ஆசாமி பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை இந்த போலி கணக்கின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!