
”எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் தான். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,”இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. ‘முள்ளும் மலரும்’, ’ஜானி’ படங்கள் மூலம் எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.
மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள மகேந்திரன் ரஜினியை வைத்து மட்டுமே ‘முள்ளும் மலரும்’,’ஜானி’,’கை கொடுக்கும் கை’ ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.