இயக்குனர் மகேந்திரன் பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்கள்!

By manimegalai aFirst Published Apr 2, 2019, 12:45 PM IST
Highlights

குறை பிரசவத்தில் பிறந்த, குழந்தைகளை பாதுகாக்கும் இன்குபெட்டர் கருவி அந்த காலத்தில் இல்லை, எனவே இவர் குறை பிரசவத்தில் பிறந்த போதிலும், இவருடைய அம்மா பலவீனமாக இருந்ததால்,  இவருடைய உயிரை காப்பாற்ற இவருடைய தாயாருக்கு பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அவருடைய அடிவயிற்றிலே வைத்து சூடு கொடுத்து காப்பாற்றினார்.
 

குறை பிரசவத்தில் பிறந்த, குழந்தைகளை பாதுகாக்கும் இன்குபெட்டர் கருவி அந்த காலத்தில் இல்லை, எனவே இவர் குறை பிரசவத்தில் பிறந்த போதிலும், இவருடைய அம்மா பலவீனமாக இருந்ததால்,  இவருடைய உயிரை காப்பாற்ற இவருடைய தாயாருக்கு பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அவருடைய அடிவயிற்றிலே வைத்து சூடு கொடுத்து காப்பாற்றினார்.

இந்த மருத்துவர் தான், நடிகர் கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்கவும் காரணமாக இருந்தவர்.

இயக்குனர் மகேந்திரன் தற்போது வரை இந்த மருத்துவரின் புகைப்படத்தை வீட்டில் வைத்து, கடவுளுக்கு நிகராக போற்றி வருகிறார்.

இவர் மீது இவருடைய சகோதர, சகோதிரிகள் அனைவரும் ஒரு வித பயத்துடன் தான் இருப்பார்களாம். அன்பானவராக இருந்தாலும் மிகவும் கண்டிப்பானவர்.

குறிப்பாக பிறந்த நாள் அன்று, இவருக்கு வாழ்த்து தெரிவித்தால் சுத்தமாக பிடிக்காது. ஒவ்வொரு வயது அதிகரிக்கும் போதும்... நம் வாழ்நாள் குறைகிறது, இதனை கொண்டாட வேண்டுமா என கூறுபவர்.

கல்லூரி நாட்களில், தன்னுடைய துடுக்கான பேச்சால், எம்.ஜி.ஆர் அவர்களையே கவர்ந்தவர். திரையுலகமே வேண்டாம் என இருந்த போதிலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கையை காப்பற்றியவர்.

ஆடுபுலி ஆட்டத்தில் ரஜினி - கமல் ஒன்றாக நடித்த போது அந்த படத்தில் கதாசிரியராக பணியாற்றிய இயக்குனர் மகேந்தரனுடன் ரஜினிக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. 

வெளிநாடுகளில், தற்போது வரை அரங்கேறி வரும் மேடை நாடகங்களில் தமிழகத்தில் இல்லை என அதிகம் வருத்தப்பட்டவர். 

மேலும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வர வேண்டும் என்றும், அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என வலியுறுத்தியவர்.

பிரபல கல்லூரியில் தலைமை பேராசிரியராக பல வருடங்கள் மாணவர்களுக்கு திரையுலக படிப்பு குறித்து பாடம் கற்பித்தவர்.

நடிகர் விஜயுடன் இவர் நடித்த 'தெறி' படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும், பின் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் அட்லீ தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றவும், அவர்களை அவமதிக்க கூடாது என்பதற்காகவும் இந்த படத்தில் நடித்தார்.

தெறி படத்தில் நடிக்க இவர் போட்ட நிபந்தனைகளில் ஒன்று, முதல் நாள் படப்பிடிப்பில் இந்த கதாப்பாத்திரத்திற்கு தான் பொருந்த வில்லை என்றால், வெளிப்படையாக எந்த தயக்கமும் இன்றி சொல்லிவிடுங்கள், நான் வெளியேறுகிறேன் என்பது தான்.

நீண்ட இடைவெளிக்கு பின் 'பேட்ட' படத்தில் தன்னுடைய நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.ஜி.ஆர் , ரஜினி, விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடனும் பணியாற்றிய பெருமைக்கு உரிய மாமனிதர் இயக்குனர் ஜெ.மகேந்திரன்.

click me!