ஆணியுடன் மட்டும் விளையாடாதீங்க விஜய்? கண்டித்த இயக்குனர் மகேந்திரன்!

By manimegalai aFirst Published Apr 2, 2019, 11:24 AM IST
Highlights

கதாசிரியராக தமிழ் திரையுலகில் காலடி பதித்து, வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களால் அறியப்பட்ட பிரபலம் இயக்குனர் ஜெ.மகேந்திரன். 
 

கதாசிரியராக தமிழ் திரையுலகில் காலடி பதித்து, வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களால் அறியப்பட்ட பிரபலம் இயக்குனர் ஜெ.மகேந்திரன். 

உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை காலமானார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

'முள்ளும் மலரும்' , 'உதிரி பூக்கள்' போன்ற காலத்தால் அழியாத குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இயக்கிய இவரை, ஒரு நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாலகிருஷ்ணனை தான் சேரும். பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் 2006 ஆண்டு நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, திரையுலகை விட்டு முழுமையாக விலகி இருந்த இவரை, 10 வருடங்களுக்கு பின் விஜய் நடித்த தெறி படத்தில் தான் பார்க்க முடிந்தது. இயக்குனர் அட்லீ, வேண்டுகோளை ஏற்று, மாஸ் வில்லனாக நடித்தார். இந்த படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களால்  அதிகம் பேசப்பட்டது.

இந்த படத்தில் படப்பிடிப்பில், வில்லன் தொனியில்... நடிகர் விஜய் கையை கட்டி போட்டு, அவர் அருகில் அமர்ந்து மகேந்திரன் பேசுவார். அப்போது விஜய் கட்டி போட்ட நாற்காலியை  உடைத்து கொண்டு சண்டை போடுவார். அந்த காட்சியில் விஜய் அமர்ந்திருந்த நாற்காலியில் நிறைய ஆணிகள் அடிக்கப்பட்டிருந்ததாம். இதை பார்த்து அதிர்ச்சியான மகேந்திரன். "விஜய் தயவு செய்து ஆணியுடன் மட்டும் விளையாட வேண்டாம்'. ஒரு ஆணி குற்றினால் அது செப்டிக் ஆகி பல வழியில் துன்பங்களை தரும் என செல்லமாக கண்டித்ததாக பிரபல ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். 

மேலும் நடிகர் விஜய் தன்னிடம் வந்து, "இந்த இடம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை தானே, என வருத்தத்துடன் கேட்டதாகவும் கூறியுள்ளார். 

 

click me!