அண்ணன் தங்கை பாசத்திற்கு அடையாளம் என்றால் என்றைக்கும் அது ‘முள்ளும் மலரும்’தான்...மு.க. ஸ்டாலின் புகழாரம்...

Published : Apr 02, 2019, 11:07 AM IST
அண்ணன் தங்கை பாசத்திற்கு அடையாளம் என்றால் என்றைக்கும் அது ‘முள்ளும் மலரும்’தான்...மு.க. ஸ்டாலின் புகழாரம்...

சுருக்கம்

”இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் இயக்குநர் மகேந்திரன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார் தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின்.


”இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் இயக்குநர் மகேந்திரன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார் தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் திரையுலக இயக்குநர்களில் 'கதாநாயகராக' விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79 ஆவது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்று சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு 'இலக்கணமாக' விளங்கிய அவர் ஒரு 'யதார்த்த சினிமா இயக்குநர்' என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர். தமிழ் உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை, வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர்! மகேந்திரன் கதை, வசனம் எழுதி, இயக்கிய ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் இன்றைக்கும் 'அண்ணன் - தங்கை பாசத்திற்கு' அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் திகழ்வதை நாம் காண்கிறோம்.

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல 'துக்ளக்' போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் - எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி, பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்.

பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!