
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. ஐம்பது லட்சத்தை அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இதற்கு மேலும் தேவைப்படும் உதவிகளை தனது ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அறிவித்தார். இந்த 50 லட்சம் பணமாக அல்லாமல் பொருட்களாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் முதல் உதவியாக புயல் நிவாரணத்துக்கு ரூ. 50 லட்சம் அறிவிக்கத் துவங்கியதும், அடுத்த சில மணி நேரங்களிலேயே விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்கள் தரப்பு உதவிகளை அறிவித்தனர்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தினருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி உதவி வருவதாகக் குழப்பமான செய்திகள் நிலவுகின்றன. அஜீத் தனது குடும்பத்தினருடன் கோவா சென்றிருப்பதால் நாளை சென்னை திரும்பியதும் ஒரு மிகப்பெரிய தொகையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்றுமுன்னர் தனது நிவாரண உதவித்தொகையாக ரூ.50 லட்சத்துக்கான பொருட்கள் மதிப்புள்ள பொருட்களை வழங்குவதாக அறிவித்ததுடன் தனது ரசிகர் மன்றத்தினர் முழு மூச்சுடன் நிவாரணப் பணிகளுக்கு உதவுவார்கள் என்றும் அறிவித்தார். கவிப்பேரரசு வைரமுத்துவும் தன் பங்குக்கு ரூ.5லட்சம் நிதி அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.